Trending News

புதிய அரசியலமைப்புக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் சர்வவாக்கெடுப்பு – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியலமைப்புக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் சர்வவாக்கெடுப்பு நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று, சபை முதர்வரும் அமைச்சருமான   லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச  நேற்றைய சபை அமர்வின் போது எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்த போதே இவ்வாறு கூறினார்.

புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி.

ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்தின நிலைப்பாடா என விமல் வீரவன்ச இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்ல இதுதொடர்பாக மேலும் தெரிவித்ததாவுது:

தேசியப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பில், 13ம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வு காண எதிர்பார்க்கபட்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அதன் பின்னரே சர்வஜன வாக்கெடுப்பு பற்றி தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச:

புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதாக இருந்தால் அது பற்றி பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படவேண்டும். அரசியலமைப்பு சபையில் விவாதம் நடத்தப்படாத நிலையில் அரசமைப்பு தயாரிப்பு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதா என வினவினார்.

அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்ல:

சில கட்சிகள் தமது யோசனைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அத்துடன், புதிய அரசமைப்பு தொடர்பில் இன்னும் ஒரு ஷரத்தேனும் எழுதப்படவில்லை. கட்சிகளின் யோசனைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவை சபையில் சமர்ப்பிக்கப்படும். எதனையும் ஒழித்து மறைத்து செய்யப்போவதில்லை. பகிரங்கமாக ஊடகங்களின் முன்னால் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 13 ஆவது திருத்தச்சட்டம் போதுமானது அல்ல அதற்கு அப்பால் செய்யவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷதான் முதன்முதலில் கருத்து வெளியிட்டிருந்தார் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச:

மஹிந்த ராஜபக்ஷ கூறியது 13 பிளஸ் என கூறியது சமஷ்டி தீர்வை அல்ல. உங்கள் அரசுதான் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலுக்கமைய சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவர முயற்சிக்கிறது.

Related posts

Ex-DIG Anura Senanayake & Sumith Perera further remanded

Mohamed Dilsad

Iranians nabbed with heroin detained until 29th March

Mohamed Dilsad

තවත් ෆයිසර් මාත්‍රා තොගයක් කටුනායකට

Mohamed Dilsad

Leave a Comment