Trending News

நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடை

(UTV|COLOMBO)-மின்சார சபை பொறியலாளர்களால் முன்னெடுக்கப்படும் வரையறைக்கு உட்பட்டு கடமையாற்றும் போராட்டத்தினால், இன்றும் நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அனுராதபுரம், பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களிலும், கலுபோவில பகுதியிலும் இன்று காலை மின்சார விநியோகம் தடைபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 9ம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்டகால மின்னுற்பத்தி வேலைத்திட்டத்துக்கு பொதுபாவனைகள் ஆணைக்குழு இன்னும் அனுமதி வழங்காமைக்கு எதிராக இந்த போராடடம் முன்னெடுக்கப்படுகிறது.

தங்களது கோரிக்கைக்கு அதிகாரிகள் இன்னும் உரிய பதிலை வழங்காததால், தொடர்ந்தும் தாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக, மின்சார சபையின் பொறியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மின்னல் தாக்கி 25 பேர் பலி

Mohamed Dilsad

வனவிலங்கு துறை அதிகாரிகள் அர்ப்பணிப்பு கடமையில் இருந்து விலகல்

Mohamed Dilsad

President vows to fight fraud and corruption

Mohamed Dilsad

Leave a Comment