Trending News

நீர் வழங்கல் மற்றும் நுகர்வோர் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-மின்சார பொறியிலாளர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை பலப்படுத்தியுள்ள நிலையில், நீர் மற்றும் நுகர்வோர் அதிகார சபைகளின் விசாரணை அதிகாரிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வார இறுதிநாள் பணிகள் மற்றும் அவசர புனரமைப்பு நடவடிக்கைகளையும் புறக்கணிப்பதாக மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நீண்ட கால மின்னுற்பத்தி திட்டம் ஒன்றுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இதுவரை அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்த போராட்டம் கடந்த 9 ஆம் திகதி முதல் மின் பொறியியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில், வார இறுதி மற்றும் அவசர சேவைகளையும் புறக்கணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வேதன உயர்வை கோரி இன்றைய தினம் 4 மணி நேரம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டு குழுவின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனுடன் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி ஒருவரை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் என கூறுப்படும் ஒருவர் அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அதிகார சபையின் அதிகாரிகள் இன்றயை தினம் முதல் நாடாளாவிய ரீதியில் தொழிற்சஙக் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Services of 3 Police Officers suspended

Mohamed Dilsad

டான்ஸ் டீச்சராக ரெஜினா

Mohamed Dilsad

நான்கு வீதத்தால் அதிகரித்த பஸ் கட்டணம்

Mohamed Dilsad

Leave a Comment