Trending News

தேசிய கடற்கரை கபடி போட்டியில் ஊவா, வடமத்திய அணிகள் வெற்றி

(UTV|COLOMBO)-44 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான கடற்கரைக் கபடிப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊவா அணியும், பெண்கள் பிரிவில் வட மத்திய மாகாண அணியும் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளன.

மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில் நேற்றுக்காலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மோதிய கிழக்கு மாகாண ஆண் மற்றும் பெண் அணிகள் இரண்டாம் இடங்களினைப் பெற்றுக்கொண்டன.

இறுதிச்சுற்றில் ஊவா ஆண்கள் அணி 40 புள்ளிகளையும் கிழக்கு அணி 28 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பெண்கள் அணியில் கிழக்கு அணி 41 புள்ளிகளையும், வட மத்திய அணி 48 புள்ளிகளையும் பெற்றதன் அடிப்படையில் போட்டிகள் நிறைவடைந்தன.

 

இரத்தினபுரியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு நடைபெறும் குறித்த கடற்கரைக் கபடிப் போட்டிகள் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கடந்த 01ஆம் திகதி ஆரம்பமானது.

 

9 மாகாணங்களின் அணிகளும் பங்குபெறும் வகையில் ஞாயிற்றுக்கிழமை வரை 18 போட்டிகள் நடைபெற்றன.

இவ்வருட ஆரம்பம் முதல் 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு பிரதேச, மாவட்ட ரீதியில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாகாண ரீதியான போட்டிகளின் பின்னர் அப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்கள் தேசிய ரீதியான போட்டிகளில் பங்குபற்றுவர்.

 

இந்த இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபை உறுப்பினரும் விளையாட்டு உத்தியோகத்தர்களுமான எஸ்.பூபால்ராஜ், கே.ரூபராஜ், கபடிப் பயிற்றுவிப்பாளர் து.மதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பரிசளிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் கே.சத்தியசீலன், விளையாட்டுத்திணைக்கள பணிப்பாளர் ஐ.பி.வி ஜயதிலக, கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களப்பணிப்பாளர் என். மதிவண்ணன், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.ஈஸ்பரன், திருகோணமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.விமலசேன உள்ளிட்டோரும் மாநகர சபை உறுப்பினர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகெண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

Official Local Government Election polling cards to be handed to post today

Mohamed Dilsad

Lewis Hamilton apologises for making “inappropriate” remark

Mohamed Dilsad

Sri Lanka represented at “Tourest – 2017” Travel Fair

Mohamed Dilsad

Leave a Comment