Trending News

இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா

(UTV|INDIA)-பிரபல தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் சிறந்த நடிகராக `விக்ரம் வேதா’ படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய `அறம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றார். மேலும் மக்களின் மனம் கவர்ந்த நாயகிக்கான விருதையும் நயன்தாரா தட்டிச் சென்றார்.

இவ்வாறாக இரண்டு விருதுகளை வென்றிருக்கும் நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது,
`உன்னை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது நயன்தாரா ! மேலும் சிறக்க ! இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா, மேலும் பல இதயங்களை கொள்ளையடிக்க வாழ்த்துக்கள் ! அறம் படத்தின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்றும், மற்றொரு டுவீட்டில், என் விருதுடன், அவளது விருதுகள் என்று தலைப்பிட்டு, மனதிற்குள், நம்ம எப்போ இப்படி விருதா வாங்கி, இந்த புள்ள கிட்ட கொடுக்கப் போரோமோ என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த நடிகருக்கான விருதை வென்ற விஜய் சேதுபதிக்கும், விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் பலர் பலி

Mohamed Dilsad

වෛද්‍ය වර්ජනය ඇරඹේ

Mohamed Dilsad

Woman arrested over Grandpass shooting incident

Mohamed Dilsad

Leave a Comment