Trending News

அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

(UTV|COLOMBO)-புதிதாக வௌியிடப்பட்டுள்ள உலக அளவில் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேறியுள்ளது.

163 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இலங்கை இம்முறை 67 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 5 இடங்கள் முன்னேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பட்டியலின் அடிப்படையில் தெற்காசியாவில் முதலாம் இடம் பூட்டானுக்கும் இரண்டாம் இடம் இலங்கைக்கும் கிடைத்துள்ளது.

இந்த புதிய பட்டியலின் அடிப்படையில் உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தொடர்ந்தும் 10 ஆவது ஆண்டாக தேர்வாகியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறது.

ஐஸ்லாந்தைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஒஸ்திரியா, போர்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

சிரியா தொடர்ந்தும் ஐந்தாவது வருடமாக உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆண்ட்ரியாவுக்கு நடந்தது என்ன?

Mohamed Dilsad

Minister Haleem address social media rumours

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු මන්ත්‍රී සහ ඇමතිවරුන්ගේ ආරක්ෂාව පිළිබඳ තක්සේරුවක්.

Editor O

Leave a Comment