(UDHAYAM, COLOMBO) – மஹியங்கனை மாபாகடவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் மஹியங்கனை கொன்கொஸ் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞர் என காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞர் தனது தாயுடன் பாதையில் பயணித்து கொண்டிருந்த போது இந்த காட்டு யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் உயிரிழந்துள்ள இளைஞரின் தாயிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.