Trending News

டிரம்புடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு

(UTV|SINGAPORE)-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நாளை காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றே சிங்கப்பூர் வந்தடைந்தார். சிங்கப்பூர் நாட்டின், பய லேபார் விமான தளத்திற்கு வந்தடைந்த அவரை, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
இந்நிலையில், சிங்கப்பூர் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான இஸ்தானாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் லீ செய்ன் லூங் டிரம்பை வரவேற்று அழைத்துச் சென்றார். டிரம்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

இதையடுத்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து லீ செய்ன் லூங், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு பிரதமர் லீ மதிய விருந்து அளித்தார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Shantha Abeysekara further remanded

Mohamed Dilsad

Canadian High Commissioner meets Raghavan

Mohamed Dilsad

Heavy traffic in Borella due to heavy rains

Mohamed Dilsad

Leave a Comment