Trending News

முதல் போட்டியில் ரஷியா வெல்லும் – அசிலிஷ் பூனை கணிப்பு

(UTV|RUSSIA)-உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ரஷியாவில் தொடங்க உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ?, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு.

2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று அது சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.
இந்த முறை உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள அந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ரஷியா – சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் ரஷியா அணி வெல்லும் என அசிலிஷ் கணித்துள்ளது. அகிலிஷ் பூனையின் கணிப்பு எப்படி இருக்க போகிறது என்று போட்டி போகப் போக தான் தெரியும்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

France mosque shootings: Two injured in Bayonne attack

Mohamed Dilsad

பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்

Mohamed Dilsad

Laws on Local Government to be amended

Mohamed Dilsad

Leave a Comment