Trending News

தொழிற்சங்க நடவடிக்கையால் நீர் விநியோகம் பாதிப்பு?

(UDHAYAM, COLOMBO) – தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் தலைவர் ஏ.ஏ.அன்சார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தமது பதவியின் தரம் குறைப்பு மற்றும் சிறப்பு உரிமை குறைப்பு செயல்பாட்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 9 ஆம் திகதி முதல்இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

மாத்தறை, வெலிகம, கரகொட, உயன்கொட மற்றும் மிரிஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தற்போது குறைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

தனியார் பஸ்களில் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

Mohamed Dilsad

කොළඹ කොටස් වෙළෙඳපොළ දරුණු කඩාවැටීමක

Editor O

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி

Mohamed Dilsad

Leave a Comment