Trending News

ஊழியர்களது விடுமுறைகள் இரத்து

(UTV|COLOMBO)-தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக , தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார்.

 நாளை (19) கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களும் பதவி விலகியதாக கருதப்படுவார்கள் என்றும் அவரதெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் அனைத்து தபால் நிலையங்களிலும் சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது’

 

மேலும், ‘தபால் நிலையங்களின் தபால் அதிபர்கள், பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும், அரச ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்களின் நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்’ எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வீரவங்சவின் பிணை கோரிய மனு – எதிர்ப்பு தெரிவிக்க திகதி அறிவிப்பு

Mohamed Dilsad

ඡන්ද දායකයින් වහල් මානසිකත්වයෙන් මිදිය යුතුයි – ඇමති අමරවීර කියයි

Mohamed Dilsad

Premier launched first ever tourist-friendly Tuk-Tuk service

Mohamed Dilsad

Leave a Comment