(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரிப்பின் மனைவி குல்சூம் ஷெரிப்(68). புற்றுநோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட குல்சூம் பல மாதங்களாக லண்டன் நகரில் உள்ள வீட்டில் தங்கியவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது கணவர் நவாஸ் ஷெரிப், மகள் மரியம் ஷெரிப் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது லண்டன் சென்று அவரை பார்த்துவிட்டு வருவதுண்டு.
அவ்வகையில், நேற்று நவாஸ் ஷெரிப், மகள் மரியம் ஷெரிப் ஆகியோர் குல்சூமை பார்ப்பதற்காக கடந்த வியாழக்கிழமை விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்று சேருவதற்குள் நேற்று பின்னிரவில் கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட குல்சூம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் காவலாளிகள் கண்ணில் படாமல் குல்சூம் சிகிச்சை பெற்றுவரும் அறைக்குள் நேற்று புகுந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்த ஒரு காவலாளி அவரை லண்டன் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
நவீத் பாரூக் என்னும் அந்நபரை கைது செய்துள்ள போலீசார், அவர் யார்? என்ன நோக்கத்துக்காக நவாஸ் ஷெரிப் மனைவி இருக்கும் அறைக்குள் நுழைய முயன்றார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]