Trending News

தனியார் மருத்தவ சேவைகள் சிலவற்றுக்கான வெட் வரி நீக்கம்

(UTV|COLOMBO)-தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் சிலவற்றுக்காக அறவிடப்படுகின்ற வெட் வரி நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

வைத்தியரின் கட்டணம், வைத்திய ஆலோசனை கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம், ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வெட் வரி ஜூலை 01ம் திகதி முதல் நீக்கப்படுவதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

வௌிநோயாளர் பிரிவுக்கு அறவிடப்படுகின்ற வெட் வரி ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் இதன் போது கூறினார்.

எவ்வாறாயினும் தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும்போது அறவிடப்படுகின்ற அறைக்கட்டணம் மீதான வெட் வரி இருப்பது போன்றே அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பிரதமரின் அனுமதியுடனே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றார்

Mohamed Dilsad

Yala Block One closed from Sept. 01 to Nov. 01

Mohamed Dilsad

US to impose new sanctions on Russia for supporting Syria

Mohamed Dilsad

Leave a Comment