Trending News

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கில் நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்க நீதிமன்றம் உத்தரவு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து, கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்கி வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமுதினி விக்ரமசிங்க மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கெழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்காமல் வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீடு செய்திருந்தார்.

நீதிபதி கிஹான் குலதுங்க பக்கச்சார்பாக செயற்படுவதாக மனுதாரரான மஹிந்தானந்த அளுத்கமகே தனது மேன்முறையீட்டில் கூறியிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Two more JMI activists arrested in Ampara

Mohamed Dilsad

அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்

Mohamed Dilsad

China lifts ban on trade of rhino horn, tiger parts

Mohamed Dilsad

Leave a Comment