(UTV|COLOMBO)-ஃபாம்ஸ் பிரைட் தனியோர் நிறுவனத்தின் உற்பத்திப் பொருளான கிரிஸ்பிறோவினால் ´சமையற்கலை உணவு எக்ஸ்போ 2018´ இல் சமையற்கலை நிபுணத்துவம் மற்றும் விழிப்புணர்வு பற்றி செயல்திட்ட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இதில் கிரிஸ்பிறோ கோல்டன் சிக்கனின் பல தரப்பட்ட தயாரிப்புகள் பங்கெடுத்தன.
சத்துணவு முக்கியத்துவம் மற்றும் தரத்தில் தமது உற்பதிகளை பொருட்கள் பேணப்படுவதாக விழிப்புணர்வை ஏற்படுத்தி இதனை அதி உயர்ந்த சத்துணவாக கிரிஸ்பிறோ இணம் கோட்டப்டுவதே இதன் பிரதான இலக்காக இருந்தது. இதன்மூலம் இல்லத்தரசிகள் பிரதம சமையற்கலை நிபுணர்கள், ஹோட்டல் காரர்கள், உணவு சம்பந்தப்ட்டவர்கள் கவரப்பட்டு வருகிறார்கள்.
எக்ஸ்ப்போ நிகழ்வில் அதிசுவை மிகுந்த கிரிஸ்பிறோ மஞ்சள் சிக்கனை சமைக்கும் போது அதன் சத்துணவு பெறுமதியையும் தரத்தையும் பார்வையாளர்கள் நோில் கண்டு அறிந்து கொண்டார்கள்.
விட்டமின் ஏ சோளத்தை உணவாக கொண்ட இச் சிக்கனில் அபரிமிதமாக காணப்படுவதாக சத்துணவு நிபுணர் டொக்டர் கிரிஷாந்தி பிரேமரத்ன இதன் போது விளக்கிக் கூறினார்.
ஏனைய சிக்கனை விட கிரிஸ்பிறோ சிக்கன் சிறந்தது என எடுத்துரைக்கப்பட்டது. பலதரப்பட்ட தானிய உணவுகளில் கரடோனோயிட்ஸ் அதிகம் செறிந்து காணப்படும் சோளமே கோழிகளுக்கு உணவாக தரப்படுகிறது.
பறவைகள் பொதுவாக கரடோனோயிட்சை தமது உடலில் உற்பத்தி செய்வதில்லை. கோழிகளுக்கு வழங்கப்படும் இவ்வுணவுகள் மூலமே கரடோனோயிட்ஸ் உள்வாங்கப்படுகிறது.
மஞ்சள் சோளமும் தானிய வகையும் அதிகப்படியான கரடோனோயிட்மை கோழிகளுக்கு கொண்டு செல்கிறது. கோழிகளின் தோல், ஈரல், கொழுப்பு மற்றும் முட்டையில் கரடோனோயிட்ஸ் சேமித்து வைக்கப்படுகிறது. கிரிஸ்பிறோவினால் உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் காணப்படும் மஞ்சள் நிறம் தரக் குறைவான உற்பத்தி என்பதனை எடுத்துரைப்பதில்லை.
இதற்காகவே இலங்கை பிரதம சமயங்காரர் சங்கம் உலக சமையற்கலை அமைப்புகளுடன் இணைந்து ஜூன் மாதம் 1, 2, மற்றும் 3 திகதிகளில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் இந்த உணவு எக்ஸ்போ 2018 ஐ ஏற்படுத்தியிருந்தது. புணரமைக்கப்பட்ட பயண மற்றும் உபசரிப்பு அமைப்புகள் மற்றும் உணவு குடிவை அமைப்புக்களை சேர்ந்த உள்ளூர் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்கள் இதில் பங்கேற்றன.
எமது வாடிக்கையாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். கிரிஸ்பிறோ மஞ்சள் சிக்கனில் சத்துணவு நிறைந்துள்ளன.
இலங்கையில் பற்றாக்குறையாக காணப்படும் சத்துணவு குறைவு மற்றும் விட்டமின் ஏ யை வழங்குவதே எமது பிரதான இலக்காகும். இந்த எக்ஸ்போ 2018 விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எமது குழு சிறப்பாக செயற்பட்டுள்ளது என நான் கருதுகிறேன்.
எமது வாடிக்கையாளர்களின் மிகவும் நெருங்கி தொடர்பினையே நாம் எதிர்பார்க்கிறோம் என ஃபாம்ஸ் பிரைட் தனியார் நிறுவனத்தின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் அமோரிஸ் செலர் தெரிவித்தார்.
கிரிஸ்பிறோ 1972 இல் 100 கோழிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்காக தரம், புத்தம் புதிய தயாரிப்புகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தல் என்பன இந்நிறுவனத்தின் அடுத்த இலக்காக அமைந்துள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]