Trending News

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை இன்று சற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதுதவிர வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் கடற்றொழிலின் போது அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Heavy security to ensure safety at Kandy Perahera

Mohamed Dilsad

06 யானைகள் உயிரிழந்த அதே இடத்தில் மேலும் 05 யானைகள உயிரிழப்பு

Mohamed Dilsad

යෝෂිත රාජපපක්ෂ අත්අඩංගුවට

Editor O

Leave a Comment