Trending News

13 ஆயிரம் அகதிகளை பாலைவனத்திற்கு துரத்திய அல்ஜீரியா

(UTV|ALGERIA)-சோமாலியா, நைஜீரியா, மாலி மற்றும் லிபியா போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரனமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பகுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் அண்டை நாடான அல்ஜீரியாவில் தஞ்சமடைய முயற்சிக்கின்றனர்.

ஆனால், அவர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பட்டு சஹாரா பாலைவனத்திற்கு துரத்தப்படுகின்றனர். 48 டிகிரி வெயில் கொளுத்தும் பாலைவனத்தில் அகதிகள் இறக்கிவிடப்படும் அவலம் கடந்த பல மாதங்களாகவே அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 14 மாதங்களில் சுமார் 13 ஆயிரம் அகதிகள் அவ்வாறு இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்களில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பசி, தாகம் மற்றும் வெயிலின் தாக்கத்தால் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அகதிகள் பாலைவனத்தில் தஞ்சமடைந்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அகதிகளில் பலரை ஐ.நா மீட்புக்குழு மீட்டுள்ளது. அல்ஜீரிய அரசின் இந்த செயலை ஐ.நா கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என தனது மீதான குற்றச்சாட்டை அல்ஜீரிய அரசு மறுத்துள்ளது.
இருப்பினும் கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அகதிகள் மேம்பாட்டுக்காக ஐரோப்பாவில் இருந்து சுமார் 111.3 மில்லியன் டாலர் உதவித் தொகையை அல்ஜீரியா பெற்றுள்ளது.
இதுவரை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிய அகதிகளின் எண்ணிக்கையை அல்ஜீரியா வெளியிடவில்லை என்றாலும் கடந்த ஓராண்டில் மட்டும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 2,888 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மின்னல் தாக்கி ஐவர் காயம்

Mohamed Dilsad

நடிகை தீபானி சில்வா கைது

Mohamed Dilsad

Water price hike proposed for 2020

Mohamed Dilsad

Leave a Comment