Trending News

ரோகண விஜயவீரவை தேடி தருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

(UTV|COLOMBO)-காணமற்போன மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருடைய மனைவி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ரோகண விஜயவீரவின் மனைவி ஶ்ரீமதி சித்ராங்கனி விஜேவீர தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி உலபனே பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பு தரப்பினரால் ரோகண விஜயவீர கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை அவர் எந்தவொரு நீதிமன்றத்திலும் ஆஜர் செய்யப்படவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தொடர்பில் சட்டரீதியான முறையில் இதுவரை அறிவிக்கவில்லை என்றும், இதன்காரணமாக அவருக்கு நேர்ந்தது என்னவென்று தெரியாதிருப்பதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று முதல் சாதாரணத்தரப்பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்…

Mohamed Dilsad

அரச நிறுவனங்களில் பணி புரியும் உத்தியோகத்தர்களின் ஆடைகள் தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு

Mohamed Dilsad

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க குழு

Mohamed Dilsad

Leave a Comment