Trending News

கால்வாயில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

(UTV|COLOMBO)-நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்ட பகுதியில் பொகவந்தலாவ – நோர்வூட் பிரதான வீதியின் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கால்வாய் ஒன்றில் இனந் தெரியதாக பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (09) காலை 08 மணி அளவில் இந்த சடலம் கண்டு பிடிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்ட மக்கள் காலை தொழிலுக்கு சென்ற போதே குறித்த சடலத்தினை கண்டு நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் இதுவரையிலும் அடையாளம் காணபடவில்லையெனவும் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது

குறித்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலை என்பதை அறிவதற்காக சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதவான் வரவழைக்கபட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு

Mohamed Dilsad

Train derails in Uttar Pradesh, India

Mohamed Dilsad

தெமடகொட – வீட்டு தொகுதி ஒன்றில் தீப்பரவல்

Mohamed Dilsad

Leave a Comment