Trending News

யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளது என்று காசல் வீதி, மகளீர் மருத்துவமனையின் விசேட நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களை ஆராய்ந்தால், 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரிப்பதும், பிள்ளை பெறுவதும் பிரச்சினைக்குரிய விடயமாகும். இதற்காக அரசாங்கம் கூடுதலான தொகையை செலவழிக்க நேர்ந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சிறப்பு நிபுணர் டொக்டர் சஞ்சீவ கொடகந்த கருத்து வெளியிடுகையில், குடும்பத்திட்டமிடல் மூலம் அனாவசிய கர்ப்பங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என்ற சொன்னார். இலங்கையின் சனத்தொகையும் சடுதியாக அதிகரிப்பதால் குடும்பக் கட்டுப்பாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக குடும்பத் திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு நிபுணர் கீதாஞ்சலி மாபிற்றிகம குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திங்களன்று

Mohamed Dilsad

சுவசரிய இலவச அம்பியுலன்ஸ் சேவை – கிழக்கு மாகாணத்தில் அறிமுகம்

Mohamed Dilsad

ஸிம்பாப்வே தேர்தல்: படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

Mohamed Dilsad

Leave a Comment