(UDHAYAM, COLOMBO) – கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்து மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு அதிகரித்து நிலவுகிறது.
இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.