(UDHAYAM, COLOMBO) – மன்னார் பேசாலை பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நோயை பரப்பும் அனோபிலிக்ஸ் ஸ்டீவன்சய் என்ற நுளம்பினத்தின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேரிய தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு இந்த நுளம்புகள் பரவாதிருப்பதாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பேசாலையில் இந்த நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நுளம்பினங்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.