Trending News

கட்டார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்

(UTV|DUBAI)-ஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும், புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக், ஐக்கிய அமீரக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதால் கத்தாரில் தஞ்சமடைந்துள்ளதாக தோஹாவுக்கு இன்று வந்தடைந்த அல்-ஷாரிக் அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அல்-ஷாரிக்கின் குற்றச்சாட்டை ஐக்கிய அமீரக வெளியுறவு மந்திரி மறுத்துள்ளார்.
ஐக்கிய அமீரக வரலாற்றில் முதன்முறையாக ஆட்சியாளர்கள் மீது அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டுவது இதுவே முதன்முறையாகும்.
பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறி கத்தார் உடனான தூதரக ரீதியிலான உறவை கடந்தாண்டு சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம்,எகிப்து,பஹ்ரைன் உள்ளிட்ட சில நாடுகள் துண்டித்தது குறிபிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Mahinda Rajapaksa assumes duties as new Prime Minster [UPDATE]

Mohamed Dilsad

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

Cranberries singer O’Riordan died by drowning

Mohamed Dilsad

Leave a Comment