(UTV|INDIA)-அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2+2 உயர்மட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு சென்றபோது இரு நாடுகள் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 6 ஆம் திகதி இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்புத்துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது, உலகளாவிய மற்றும் பிராந்திய நிலவரம் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த சந்திப்பை அமெரிக்கா ஒத்திவைப்பதாக கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்தியா – அமெரிக்கா இடையிலான 2+2 உயர்மட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹீதர் நௌவேர்ட் அறிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]