Trending News

காலி சர்வதேச விளையாட்டு மைதானம் விவகாரம் குறித்த கலந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO)-காலி சர்வதேச விளையாட்டு மைதானம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் யுனெஸ்கோ அமைப்பின் இலங்கை பிரதிநிதிகளுடன் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

காலி சர்வதேச விளையாட்டு மைதான வளாகத்தில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டமையினால் காலி கோட்டை, உலக மரபுரிமைத் தளம் என்ற அந்தஸ்த்தை இழக்கும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது.

இதனால் அரசியல் தரப்பிலும், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் மத்தியிலும் இந்த விடயம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

இந்த நிலையில், இது குறித்து யுனெஸ்கோ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றை பெறவுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள்

Mohamed Dilsad

Qatar to seek compensation for damages from blockade

Mohamed Dilsad

Discussions between President, TNA members concluded

Mohamed Dilsad

Leave a Comment