Trending News

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள்

(UTV|MANNAR)-மன்னார் சதொச கட்டட வளாகத்தில் 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின்போது, மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாகவுள்ளதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், எந்தவொரு எலும்புக்கூட்டிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காணப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மன்னார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில், மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் 55 மனித எலும்புக்கூடுகள் மற்றும் ஒரு தொகை மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

Australian squad bolstered by addition of seven-year-old Archie Schiller

Mohamed Dilsad

Remains of Lankan UN Peacekeepers accepted amidst Military Honours at BIA

Mohamed Dilsad

Showers to hit most parts of Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment