Trending News

பகிடி வதைக்கு 10 வருட கடூழியச் சிறை, சட்டம் அமுல்

(UTV|COLOMBO)-பகிடிவதைகளில் ஈடுபடும் சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிணைவழங்குவதற்கும் சட்டத்தில் இடம் வழங்கப்படவில்லையெனவும், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் எனவும்  உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கல்வி நிறுவனங்களில் பகிடிவதைகள் மற்றும் ஏனைய வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது தொடர்பான 1998 ஆண்டு 20ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வசீம் தாஜூதீனின் மரணம் : வாக்குமூலம் வழங்க வந்தவர் மீது தாக்குதல்

Mohamed Dilsad

“Discipline mind, body and word to make a better world” – President

Mohamed Dilsad

இராணுவ விடுமுறை விடுதியில் இப்தார் நிகழ்வு – [PHOTOS]

Mohamed Dilsad

Leave a Comment