(UDHAYAM, COLOMBO) – நாய்களை வீதிகளில் விட்டு செல்பவர்கள் மற்றும் அவற்றை வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு எதிராக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கு சட்டத்தை உருவாக்கவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனுடன் அவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனையும் வழங்குவதற்கு புதிய சட்டத்தின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக உரிய அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் நாய்கைள கொண்டு வந்து விட்டு செல்லும் நபர்களை இனங்காணுவதற்காக பாதுகாப்பு கெமராக்களையும் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.