Trending News

முறிவிநியோக மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முறிவிநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இரண்டு நீதியரசர்கள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற கணக்காய்வாளர் நாயகம் உள்ளடங்களாக இந்த குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.

இந்த குழு ஏற்கனவே சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி இருந்தது.

இந்த நிலையில் தற்போது முறிவிநியோக மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஒத்துழைப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த குழு 3 மாதங்களில் தமது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

No conditions in Rs. 86 billion MCC grant – Mangala

Mohamed Dilsad

பல்கலைகழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை

Mohamed Dilsad

பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment