Trending News

பியார் பிரேமா காதல் பற்றி ஹரீஷ் கல்யாண்

(UTV|INDIA)-யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்துள்ள படம் பியார் பிரேமா காதல். இளன் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீசாகிறது. படம் குறித்து ஹரீஷ் கல்யாண் கூறியதாவது: தமிழ் சினிமாவில் மியூசிக்கல் லவ் ஸ்டோரி வந்து வெகுநாளாகிவிட்டது. அந்த குறையை இந்த படம் போக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்துக்கு பெரிய பலம். இந்த படத்தில் வரும் ‘சீக்ரெட் விண்டோ’ எனக்கு பிடித்த பாடல். காதல் கதை என்றாலும் படத்தில் ஹியூமருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

அது தனி டிராக் காமெடியாக படத்தில் இடம்பெறாது. படத்துடன் சேர்ந்து வரும். எனது கேரக்டருமே ஹியூமரை அதிகம் வெளிப்படுத்தும். படத்தில் ஸ்ரீ என்பது எனது கேரக்டர் பெயர். மிடில் கிளாஸ் பையன். அப்பா, அம்மா, நண்பன் என இதுதான் எனது குட்டி உலகம். ஸ்ரீக்கு கனவு, லட்சியம் என்பதெல்லாம் எதுவும் கிடையாது. மொபைலில் ஒரு ஸ்டேட்டஸ் போடுவது கூட அவனுக்கு பெரிய வேலையாக தோன்றும்.

அவனுக்கு முற்றிலும் எதிர்மாறான கேரக்டர் சிந்துஜா. அந்த வேடத்தில் ரைசா நடித்துள்ளார். இப்படி இரண்டு மாறுபட்ட குணாதிசயம் கொண்டவர்கள் காதலிக்கும்போது என்ன நடக்கும் என்பதை படம் சுவாரஸ்யமாக சொல்லும். டிரெய்லர் பார்த்தவர்கள், படத்தில் அடல்ட் விஷயங்கள் இருக்கும் போலிருக்கிறதே என்கிறார்கள். அப்படி எதுவும் கிடையாது.

இது குடும்பத்துடன் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படம். படத்தில் குடும்ப சென்டிமென்ட்டும் இருக்கிறது. கிளைமாக்ஸ் கூட அந்த விஷயத்தை சொல்லும். படத்தில் நல்ல மெசேஜ் ஒன்றும் இருக்கிறது. அது கதையோடு சொல்லப்படும். படம் பார்த்துவிட்டு வௌியே வரும்போது, நல்ல என்டர்டெயினர் படம் பார்த்தோம் என்ற திருப்தி ரசிகர்களுக்கு ஏற்படும். இவ்வாறு ஹரீஷ் கல்யாண் கூறினார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Pakistan not renewing Head Coach’s contract

Mohamed Dilsad

வெள்ளை வேன் கடத்தலுடன் தொடர்புடைய திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் [VIDEO]

Mohamed Dilsad

US imposes tariffs on washing machines and solar panels

Mohamed Dilsad

Leave a Comment