Trending News

கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ அதிகாரிகளும் அடுத்த மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் அவர்களை இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், நேற்று கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மூன்று இராணுவத்தினரையும் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்தநிலையிலேயே மேலும் இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

ஊடகவியலார் கீத் நொயர் மீது கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

CID to probe hate speech on social media

Mohamed Dilsad

ஹஜ் புனித பயணம் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Mohamed Dilsad

Brazil jail riot leaves at least 57 dead

Mohamed Dilsad

Leave a Comment