(UDHAYAM, COLOMBO) – அரசாங்கத்தின் ஒன்றிணைந்த பயணத்திற்கு எதிரானவர்கள் தேசிய அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளிலும் இருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மட்டக்குளியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு உண்மைகளை பொய்யாக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரதமர் மற்றும் ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசங்கம் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு சீரான நிர்வாகத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன், அரிசி இறக்குமதியால் சுதேச விவசாயிகள் பாதிக்கப்படுவற்கு இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.