Trending News

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்

(UTV|COLOMBO)-நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பான சட்ட ஆலோசனைகளை பெற்று கொள்வதற்காக சட்டத்தரணிகள் சிலரும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குற்றவியல் திணைக்களம் இக் கடிதத்தினை அனுப்பிவைத்துள்ள நிலையில், நாளை மறு தினம் இவ்வாறு வாக்கு மூலம் பெறப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் கொழும்பு – 07 விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

இந்தோனேசியாவில் தொடர் நிலச்சரிவு- 15 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Iranamadu reservoir vested in people by the President providing solutions for water issue in North

Mohamed Dilsad

President instructs state officials to take forward their duties without leaving any room to weaken the functions of the state sector

Mohamed Dilsad

Leave a Comment