(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான நாடுதழுவிய எதிர்ப்பு போராட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய இன்று ஊவா மாகணத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று இரவு ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பில் மாலபே பல்கலைக்கழக அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் தீர்வு பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.