Trending News

ஒரு வருடத்தில் பிரியங்காவின் வருமானம் 77 கோடி

(UTV|INDIA)-பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபல நடிகையாகி இருக்கிறார். 2002 இல் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் இவரது சினிமா பிரவேசம் நடந்தது. அதன்பிறகு இந்தி படங்களில் நடித்து மளமளவென முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னால் குவாண்டிகோ டி.வி தொடர்மூலம் ஹாலிவுட்டுக்கு சென்றார்.

இந்த தொடர் அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. 2017 இல் ´பேவாட்ச்´ ஹாலிவுட் படத்தில் நடித்தார். இந்த படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. படமும் நன்றாக ஓடவில்லை. ஆனாலும் பிரியங்கா நடிப்பு பிரமாதமாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன.

இப்போது ´த ஸ்கை ஸ் பிங்´ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் படமொன்றிலும் ஒப்பதமாகி உள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக சல்மான்கான் ஜோடியாக நடிக்கவிருந்த பட வாய்ப்பை உதறி விட்டார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ளவும் தயாராகி இருக்கிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வருடம் பிரியங்கா சோப்ரா சம்பாதித்த மொத்த வருமானம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படங்கள், விளம்பர படங்கள், டி.வி தொடர்களில் நடித்தது, ஆடை நிறுவனங்கள், அழகு சாதன போருட்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தது ஆகியவற்றின் மூலம் பிரியங்கா சோப்ரா 77 கோடி சம்பாதித்து இருக்கிறார். இதில் வரி கழிவுகள் போக 56 கோடி அவருக்கு கிடைத்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

Mohamed Dilsad

Emirates says no plan to buy stake in any airline

Mohamed Dilsad

கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்…

Mohamed Dilsad

Leave a Comment