Trending News

இன்று முதல் விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரலவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நிதி மோசடி, துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் வருவாய் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்று நீதிபதிகள் அடங்கிய 3 குழாம்கள் பணிகளை முன்னெடுக்கவுள்ளன.

பாரிய நிதி மோசடிகளை விசாரிக்கும் விசேட மேல் நீதிமன்றத்திற்கான நீதிமன்ற அமைப்புத் திருத்த சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய 3 மேல் நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படவிருந்தன.

இதன் நீதிபதிகளாக, சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி முதலாவது வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Priority lane project in Rajagiriya today

Mohamed Dilsad

A person shot dead at Illiba junction

Mohamed Dilsad

Anushka not replacing Deepika in Aanand Rai’s next with Shah Rukh and Katrina

Mohamed Dilsad

Leave a Comment