Trending News

சமூக வலைதளங்களில் வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்

(UTV|INDIA)-கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமாகிய நிலையில், அந்த படத்திற்காக திரிஷா தனது சிகை தோற்றத்தை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். வடஇந்தியாவில் படமாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வந்த நிலையில், நடிகை திரிஷாவும் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது முடியின் அழகை மாற்றம் செய்து கொண்ட திரிஷா அந்த புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திரிஷாவின் இந்த புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது ரஜினி படத்திற்கானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திரிஷா இந்த படத்தில் ரஜினியின் காதலியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

Oman denies it has agreed to invest in Sri Lanka oil refinery project

Mohamed Dilsad

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Mohamed Dilsad

பிரபல நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில்!

Mohamed Dilsad

Leave a Comment