Trending News

அரச துறையினரின் சம்பள மீளாய்வு பற்றிய விசேட ஆணைக்குழு ஒன்றுகூடியது

(UTV|COLOMBO)-அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை சரி செய்வது தொடர்பில் ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட அரச துறையினரின் சம்பள மீளாய்வு பற்றிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று (27) முற்பகல் முதன்முறையாக ஒன்றுகூடியது.

இக்கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

அரச துறையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள சுற்றறிக்கைகள், ஏற்பாடுகள் தொடர்பாக கவனஞ்செலுத்தி, அரச துறையினரின் சம்பளம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகளோ முரண்பாடுகளோ காணப்படின் அவற்றைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக சம்பள மீளாய்வு பற்றிய விசேட ஆணைக்குழு 2018.08.14 ஆம் திகதி அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Trump attack on Merkel rebuffed by French President

Mohamed Dilsad

Vehicular movement along Parliament Entry Road restricted

Mohamed Dilsad

212 Drunk drivers arrested within 24-hours

Mohamed Dilsad

Leave a Comment