Trending News

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்

(UTV|INDIA)-கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் நாளை(29) திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் விமான நிலையம் கடந்த 15-ம் திகதி மூடப்பட்டதுடன், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து மட்டும் ஒருசில விமானங்கள் இயக்கப்பட்டன.

கொச்சி விமான நிலையத்தின் சீரமைப்பு பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஆனதால் விமான நிலையத்தை திறப்பதும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, விமான நிலையம் மூடப்பட்டதால் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொச்சி விமான நிலையத்தில் நாளை முதல் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலையம் அறிவித்துள்ளது.

நாளை மதியம் 2 மணியில் இருந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் முழு அளவில் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Saudi Envoy vows to take relations with Sri Lanka to new heights

Mohamed Dilsad

30-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை…

Mohamed Dilsad

கொத்தலை நீர்தேக்கத்தில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்படுகின்றது

Mohamed Dilsad

Leave a Comment