(UDHAYAM, COLOMBO) – கொழும்பில் இருந்து பொகவந்தலாவை நோக்கி பேருந்தில் போதைப் பொருளை கொண்டு சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்சி என்ற பெயருடைய 8 கிலோ கிராம் போதைப் பொருளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ள இந்த போதைப் பொருளை தோட்டப் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்தவருடன், அவர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.