Trending News

புகையிரத துறையில் பயிற்சிகளை வழங்குமாறு இராணுவம் கோரிக்கை

(UTV|COLOMBO)-புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் செயற்பாட்டு அறை முகாமையாளர்கள் ஆகியோருக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று துறைகளுக்காக 20 பேர் வீதம் மொத்தம் 60 பேருக்கு பயிற்சிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்,  இராணுவத்தினரின் அவசர தேவைப்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இதுவரையில் எந்த பதிலும், பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Vijayakala’s Pro-LTTE statement handed over to AG

Mohamed Dilsad

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து

Mohamed Dilsad

කොවිඩ් ව්‍යාප්තියේ අවධානම වැඩි රටවල් නම් කෙරේ

Mohamed Dilsad

Leave a Comment