(UTV|COLOMBO)-நாட்டில் உள்ள சகல கூட்டாண்மைகளிலும் நேர்மை மற்றும் நிதிச் செயற்பாட்டுக்காக இரண்டாவது இடம் கொமர்ஷல் வங்கி தொடர்ந்து 14வது வருடமாக இலங்கையின் மிகவும் கௌரவம் மிக்க வங்கியாகவும், நாட்டில் உள்ள கூட்டாண்மை நிறுவனங்களில் மிகவும் கௌரவத்துக்குரிய நான்காவது நிறுவனம் எனவும் 2018ம் ஆண்டு தரப்படுத்தப்பட்டுள்ளது. நீல்ஸன் நிறுவனம் நடத்திய மதிப்பீடுகளின் தொடராக LMD வெளியிட்டுள்ள தொகுப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ல் மிகவும் கௌரவத்துக்குரிய நிறுவனங்களாகப் பட்டியல் இடப்பட்டுள்ள முதல் ஐந்து நிறுவனங்களின் மத்தியில் ஒரேயொரு வங்கியாக கொமர்ஷல் வங்கி உள்ளது. 2005ல் LMD இந்த வருடாந்த தரவரிசையை வெளியிடத் தொடங்கியது முதல் கொமர்ஷல் வங்கி அதில் மிகவும் கௌரவத்துக்குரிய வங்கியாக இடம்பிடித்து வருகின்றது.
இலங்கையில் மிகவும் கௌரவத்துக்குரிய கம்பனிகளின் பட்டியலைக் கொண்ட LMD தரவரிசை நாட்டில் உள்ள மிகப் பெரிய மற்றும் பன்முகத் தன்மை கொண்ட கம்பனிகள் மற்றும் உலகில் உள்ள மிகச் சிறந்த பல்தேசியக் கம்பனிகள் என்பனவற்றை உள்ளடக்கியதாகும்.
´பொது மக்களின் கௌரவத்தை சம்பாதிப்பது என்பது உண்மையில் எமது வர்த்தகத்தில் எதிர்நோக்கப்படும் மிகவும் கஷ்டமான விடயமாகும். அந்த வகையில் இலங்கையின் கூட்டாண்மை வரிசையில் நாம் தொடர்ந்து உச்ச நிலையில் இருப்பது எமக்கு உற்சாகமாக உள்ளது´ என்று கூறினார் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான எஸ்.ரெங்கநாதன். வங்கித் துறையில் நேர்மைக்காகவும் நிதிச் செயற்பாட்டுக்காகவும், முகாமைத்துவ வரிசை மற்றும் கூட்டாண்மை காலாசாரம் என்பனவற்றுக்காகவும் உச்ச நிலையில் உள்ளமை பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இது தொடர்பான குறிகாட்டிகள் எமது வாடிக்கையாளர்களோடும் ஊழியர்களோடும் பங்கு தாரர்களோடும் தொடர்பு பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
2015ல் அது அமுல் செய்த ஓலிம்பிக் தரவரிசை முறையைப் பயன்படுத்தி கூட்டாண்மைகளின் நிலைமைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் LMD தரவரிசை கொமர்ஷல் வங்கிக்கு 46 தங்கம், 48 வெள்ளி மற்றும் 59 வெண்கலப் பதக்கங்களை வழங்கியுள்ளது. அரச மற்றும் தனியார் பிரிவுகளில் உள்ள சிரேஷ்ட நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தரவரிசை அமைந்துள்ளது. நிதிச் செயற்பாடு, தர ஆர்வம், முகாமைத்துவ வரிசை, நேர்மை, புத்தாக்கம், சுறுசுறுப்பு, கூட்டாண்மை கலாசாரம், கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR), தூரநோக்கு, தேசிய சிந்தனை என பத்து வகைப்படுத்தலின் கீழ் இவர்களது கருத்துக்கள் ஆராயப்பட்டுள்ளன.
தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 262 கிளைகளுடனும், 780 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018ன் முதல் ஆறு மாத காலத்தில மட்டும்; 16 சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியு டோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. முழு அளவிலான தனது சொந்த பணப்பரிமாற்ற சேவைகளை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]