Trending News

மகிந்த அணியினருக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிரணி கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டால், அதிக பட்ச சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எனவே, மக்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறும், காவல்துறைமா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பொருட்டு கொழும்பு நகரின் பாதுகாப்புக்காக, விசேட காவல்துறை படையணி இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றம் உள்ளிட்ட நகரின் முக்கிய பல இடங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன், புலனாய்வு பிரிவு, கலகம் அடக்கும் காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினரும் அன்றைய தினம் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபடவுள்ளனர் எனவும் காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

John Oliver to voice ‘Zazu’ in The Lion King

Mohamed Dilsad

மாத்தறை – பெலிஅத்தை இடையிலான முதல் ரயில் பயணம் நாளை

Mohamed Dilsad

Central Bank Bond Commission report handed over to President

Mohamed Dilsad

Leave a Comment