Trending News

திருத்த பணிகள் காரணமாக இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-பிரதான நீர்வழங்கல் குழாயில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த பணிகள் காரணமாக திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை(07) மற்றும் நாளை மறுதினம்(08) நீர் விநியோகம் தடைப்படும் என திருகோணமலை நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் திருகோணமலை அலுவலக பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தம்பலகமம் பிரதேசத்தல் இத்திருத்த பணி இடம்பெறவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கிண்ணியா, திருகோணமலை நகரம் மற்றும் பட்டினமும் சூழலும், பாலையுற்று, தம்பலகமம், ஆண்டாங்குளம், சாம்பல்தீவு முதல் இரக்கண்டி வரை நாளை(07) காலை 6.00 மணிமுதல் 8 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை நீர் வழங்கல் தடைபடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ICC ends match-fixing investigation into third Ashes Test

Mohamed Dilsad

Thurstan College claim W.A De Silva Memorial Trophy

Mohamed Dilsad

படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட வைரஸ்

Mohamed Dilsad

Leave a Comment