Trending News

பெறுமதி வாய்ந்த போதை மாத்திரைகள் மீட்பு

(UTV|COLOMBO)-கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் இருந்து 01 கோடி 50 இலட்சத்து 50,170 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக கூறியுள்ளார்.

சுங்கப் பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட தேடுதலின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக லிபியாவுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதி சரியாக மதிப்படப்பட முடியவில்லை என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாத்திரைகளும் 225 மில்லி கிராம் டெமடோல் வகையை சேர்ந்தது என்றும், அவற்றின் பெறுமதி சரியாக மதிப்பிடப்படவில்லை என்றும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கோட்டாபயவின் ஊடக பேச்சாளராக மிலிந்த ராஜபக்ஷ நியமனம்

Mohamed Dilsad

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இன்று சந்திப்பு

Mohamed Dilsad

Election Commission to finalise female members Local Government bodies this week

Mohamed Dilsad

Leave a Comment