Trending News

எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இதற்கமைய, 92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 149 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையும் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 161 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 123 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேநேரம், 130 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் குழு நேற்று பிற்பகல் கூடியது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 10 ஆம் திகதியும் எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் இரத்து

Mohamed Dilsad

IMF warns Trump tariff would hurt US

Mohamed Dilsad

மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை

Mohamed Dilsad

Leave a Comment