(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மூலம் நோயாளர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாளை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளனர்.
காலை 8.00 தொடக்கம் அடுத்த நாள் காலை 8.00 மணிவரை இந்த பணிப்புறக்கணிப்பு தொடரும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விஷேட மருத்துவர் அநுரத்த பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் தென் மாகாணத்தில் அரசாங்க மருத்துவமனைகளின் மருத்துவர்கள் நேற்று காலை ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பால் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளுக்கு வந்த நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.