Trending News

136 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி

(UTV|DUBAI)-ஆசிய கிண்ணத் தொடரின் நேற்றைய(21) போட்டியில் பங்களாதேஷ் அணியினை எதிர்கொண்டு ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் துடுப்பாடி 50 ஓவர்களில் 07 விக்கட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்றது, வெற்றி இலக்காக பங்களாதேஸுக்கு 256 ஓட்டங்களை நிர்ணயித்தது.

அவ்வணி சார்பில் ஹஷ்மதுல்லாஹ் ஷாஹிதி 58 ஓட்டங்களையும் , ராஷித் கான் 57 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஸ் அணி, 42.1 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தாது. பங்களாதேஸ் அணி சார்பில் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 32 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் சிறப்பான பந்துவீச்சில் ஈடுபட்ட ராஷித் கான் 09 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

16-Hour water cut in Kalutara

Mohamed Dilsad

பாராளுமன்றம் இன்று (27) காலை கூடுகிறது

Mohamed Dilsad

Ranjan apologizes to Maha Sangha for his controversial statement

Mohamed Dilsad

Leave a Comment