Trending News

பிரதமர் மாளிகையில் இருந்த எருமைகள் ரூ.23 லட்சத்துக்கு ஏலமா?

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானில் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்ற பிறகு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்த 61 ஆடம்பர கார்கள் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டன. அதன் மூலம் ரூ.20 கோடி வருமானம் கிடைத்தது.

மேலும் கூடுதலாக உள்ள 102 கார்கள், புல்லட் புரூப் வாகனங்கள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட உள்ளன. இந்த நிலையில் பிரதமர் மாளிகையில் உள்ள 3 எருமை மாடுகள் மற்றும் 5 கன்றுகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று இஸ்லாமாபாத்தில் அவை ஏலம் விடப்பட்டன. அவை 23 லட்சத்து 2 ஆயிரத்துக்கு ஏலம் போயின. அவற்றை முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் ஆதரவாளர்கள் வாங்கினர்.

8 எருமைகளில் ஒன்று நவாஸ் செரீப்பின் ஆதரவாளர் குயால்ப் அலி ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்துக்கு வாங்கினார்.

ஆனால் அதன் உண்மையான விலை ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாகும். 2 எருமைகள் மற்றும் 4 கன்றுகளை நவாஸ் செரீப் கட்சி தொண்டர்கள் பாக்கர் வாரிக் எனபவர் ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்துக்கு வாங்கினார். மற்றொரு கன்று ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

இந்த எருமை மாடுகள் அனைத்தும் நவாஸ் செரீப் பிரதமராக இருந்த போது வாங்கப்பட்டது. எனவே அவரது ஆதரவாளர்கள் இதை விரும்பி ஏலத்தில் எடுத்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“Digital Economic Policy will be implemented in 2017” – Minister Harin Fernando

Mohamed Dilsad

உரம் ஏறிச்சென்றை லொறி குடைசாய்ந்து விபத்து

Mohamed Dilsad

Laws on Local Government to be amended

Mohamed Dilsad

Leave a Comment