Trending News

`தி அயர்ன் லேடி’ படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை

(UTV|INDIA)-இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்துக்கு ‘‘தி அயர்ன் லேடி’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் போஸ்டர் வெளியானது.

‘‘தி அயர்ன் லேடி’’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை நித்யாமேனன் தேர்வாகி உள்ளார்.

நித்யாமேனன் ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அவர் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது தோழி சசிகலா கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. அந்த கதாபாத்திரம் சர்ச்சையானது என்பதால் அதில் நடிப்பது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த படத்தில் ஜெயலலிதாவின் பள்ளி வயது முதல் இறப்பு வரையிலான சம்பவங்கள், அவருடன் பயணித்த கதாபாத்திரங்கள் நிச்சயம் இடம்பெறும். சசிகலா கதாபாத்திரம் நிச்சயம் படத்தில் உண்டு” என்றார்.

இந்த வேடத்துக்கு வரலட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வரலட்சுமி சமீபகாலமாக தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சர்கார், சண்டக்கோழி 2 படங்களில் வில்லியாகவும் நடித்து இருக்கிறார்.

சசிகலா வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேசுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இவர் காக்கா முட்டை, ரம்மி படங்களில் நடித்தவர். இன்னும் ஒருசில நாட்களில் சசிகலா வேடத்தில் நடிக்க இருப்பது யார்? என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

153.1 kg of Kerala cannabis found from Northern seas

Mohamed Dilsad

Lankan father in Italy shoots daughter, attempts suicide

Mohamed Dilsad

எல்.ரி.ரி.ஈ. அமைப்பை ஊக்குவிப்பது எனது நோக்கமில்லை-விஜயகலா

Mohamed Dilsad

Leave a Comment